dinamalar telegram
Advertisement

ரிசல்ட் வரும் முன் சோகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்தபிறகு 2 நாள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மூச்சுத் திணறலுடன் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாதவராவுக்காக அவரது மகள் திவ்யா ராவ் பிரசாரத்தில் ஈடுபட்டார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் மாதவராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து இன்று காலை 7. 55 மணிக்கு இறந்தார். அவருக்கு வயது 63. தேர்தல் முடிவு வரும் முன் வேட்பாளர் இறந்தது காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement