dinamalar telegram
Advertisement

தென் மாவட்ட மக்கள் நிம்மதி

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லை. எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான நிதியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியான ஜிகாவிடம் jica மத்திய அரசு கோரி இருந்தது. திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தமிழக அரசு மாற்றித் தருவதில் தாமதம் ஏற்பட்டதாலும் கொரோனா நோய் பரவல் காரணமாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப் போனது. இதனால் இரு ஆண்டுகளாக பணி துவங்கவில்லை. 2021 மார்ச் மாதத்தில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் மார்ச் மாதம் முடியும் வரை ஒப்பந்தம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களை கோரியிருந்தார்.. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஒப்பந்த ஆவணம் கிடைத்த பிறகு தான், முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும்' என மத்திய அரசு பதிலில் கூறப்பட்டுள்ளது. கடன் தொகை பெறப்பட்ட பிறகு தான் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது பற்றிய முழு விவரங்களையும் கூற முடியும் எனவும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எய்ம்ஸ் விவகாரம் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது. எய்ம்ஸ் கட்டப்படுவது பற்றி பலவிதமான சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தென் தமிழக மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement