dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று முதல் வரும் 14-ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகள் என 100 மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளான இன்று ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாக்கமுடையான்பட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தவர்களை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடற்கரை சாலை, பூங்காக்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement