dinamalar telegram
Advertisement

தனுஷ்கோடி கடலில் நீந்தி இலங்கை வீரர் சாதனை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில், 56 கி.மீ., நீந்தி இலங்கை விமானப்படை வீரர் சாதனை படைத்தார். இலங்கை விமானப்படை வீரர் ரோசன்அபேசுந்தரே. தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே, 28 கி.மீ., துாரத்தை நீந்தி கடப்பதை லட்சியமாக வைத்திருந்தார். Fதை நிறைவேற்ற நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு தலைமன்னார் ஊர்முனை கடலில் நீந்த துவங்கினார். இந்திய, இலங்கை கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் நேற்று மதியம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலுக்கு வந்தார். இந்திய கடற்கரையில் ஏற அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கடலிலேயே ரோஷனுக்கு அந்நாட்டு வீரர்கள் ஜூஸ் கொடுத்தனர். பின் மீண்டும், 12:40 மணிக்கு நீந்த துவங்கி, இலங்கை தலைமன்னார் சென்றடைந்து சாதனை படைத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement