dinamalar telegram
Advertisement

புதுவை காரைக்கால் கடற்கரைகளில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று அதிகபட்சமாக 303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைப் பகுதியில் வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடற்கரையில் நேற்று வார இறுதி நாட்கள் என்பதால் வெளிமாநில சுற்றுலாவினர் உள்ளூர் மக்கள் என ஆயிரக்கணக்காணோர் குவிந்தனர். கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் வந்ததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடற்கரைப்பகுதிகளில் போதிய காவல் துறையினரின் கண்காணிப்பு இல்லாததால் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement