dinamalar telegram
Advertisement

கோவையில் பரபரப்பு: 4 பேர் காயம்

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஸ்ரீ ராஜா ஓட்டல் உள்ளது. நேற்று இரவு 10-.20 மணிக்கு ஓசூரில் இருந்து ஒரு பஸ் வந்தது. அதில் இருந்த பயணிகள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலின் ஷட்டர் பாதி அளவு அடைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட போலீசார் ஓட்டலினுள் நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்த பயணிகளை லத்தியால் அடித்தனர். ஒரு பெண் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, கோவை போலீஸ் கமிஷனரிடம் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லத்தியால் அடித்த எஸ்ஐ முத்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement