dinamalar telegram
Advertisement

மீண்டும் ஊரடங்கு: தீவிர ஆலோசனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,68,912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பிரேசிலை பின்னுக்கு தள்ளி கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பிரேசிலில் 1,34,82,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.19 கோடி பேர் பாதிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 904 பேர் இறந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,70,209 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,21,56,529 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 6 நாளாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது பற்றி பல மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement