dinamalar telegram
Advertisement

விடாப்பிடியாக போராடி 11 பவுனை தக்கவைத்தார்

சென்னை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கீதா வயது 24. 8 மாத கர்ப்பிணி. நேற்று வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் சிலையை கும்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். 2 பேர் பைக்கில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் நடந்து வந்து, கீதா கழுத்தில் இருந்த 11 சவரன் தாலிச்செயினை பறிக்க முயன்றான். கீதா செயினை விடாமல் பிடித்துக் கொண்டு போராடினார். செயினை அறுக்க முயன்ற திருடன், கீதாவை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றான். கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உஷாரான திருடன் பைக்கில் ஏறி தப்பிச் சென்று விட்டான். கீதாவிற்கு கை கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement