dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 13-04-2021 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதியிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாஸ்க் போடாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் சென்னையில் கொரோனா தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழகின்றன. இதன் காரணமாக புதிய படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு போல் இந்தாண்டும் கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கல்லூரிகள் கொரோனா வார்டு சிகிச்சை மையங்களாக மாறி தயார் நிலையில் இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 13-ஏப்-2021 15:39 IST

மாணவர்கள் மற்றும் மக்கள். வாழ்வை அழிக்கும் அரசியல் வாதிகளை அழிக்க வேண்டும். காரோனாவினால் பாதிக்க பட்டவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் உதவி செய்வார்களா. எலக்சன் முடிந்து விட்டதால் இனி அவர்கள் மக்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement