dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 16-04-2021 | Short News Round Up | Dinamalar

சென்னையில் 200 வார்டுகளிலும் 'மைக்ரோ லெவல் ஆபிசர்ஸ்' குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு உதவி பொறியாளர் குழுவின் தலைவராக இருப்பார். சுகாதார ஆய்வாளர், போலீசார், வருவாய் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், ஒவ்வொரு வார்டிலும் உள்ள அனைத்து தெருக்களையும் சுற்றி வந்து வீடு வீடாக கண்காணிப்பார்கள். தொற்று கண்டறியப்படும் நபருடன் உடன் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபடுவர். இதற்காக, ரிப்பன் மாளிகையில் தனி கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கள பணியாளர்களுக்கு உதவியாக 6,000 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஆறு மாத பணி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அல்லது கொரோனா மையத்திற்கு இவர்கள் அழைத்து செல்வார்கள். 108 ஆம்புலன்ஸ் வர காத்திருக்காமல் உடனே ஏற்றி செல்ல ஒவ்வொரு வார்டுக்கும் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
???????????????????
??????????????????? - , . 16-ஏப்-2021 19:34 IST

??????????????? ?????? ?????? ??????????? ????? ????????????? ???????????? !

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement