dinamalar telegram
Advertisement

ஏறத்தாழ 40 சதவீதம் சரிந்தது

கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்த நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் ஊசி போடப்படுகிறது. இதனால் நோயின் தாக்கம் கொஞ்சம் குறையும். ஆனால் இதன் விலை அதிகம். 100 மில்லி குப்பி ரெம்டிசிவர் ஊசி மருந்தின் விலை 2800 ரூபாய் முதல் 5400 ரூபாய் வரை உள்ளது. பிராண்டைப் பொறுத்து விலை மாறுபடும். இந்தியாவில் தினமும் இரண்டு லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் ரெம்டிசிவர் ஊசி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன், ரெம்டிசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரெம்டிசிவர் விலையைக் குறைக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அரசின் கோரிக்கையை ஏற்று, 7 முக்கிய பார்மா நிறுவனங்கள் ரெம்டிசிவர் ஊசிமருந்தின் விலையை சராசரியாக 39 சதவீதம் குறைத்துள்ளன. பிராண்ட் வாரியாக குறைக்கப்பட்ட ரெம்டிசிவர் விலை விவரம் வருமாறு: * ரெம்டாக் remdac விலை 2,800 ரூபாயில் இருந்து 899 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. * ரெம்வின் remwin விலை 3950 ரூபாயில் இருந்து 2450 ரூபாயாக குறைந்துள்ளது. * ரெடிக்ஸ் redyx விலை 5,400 ரூபாயில் இருந்து 2,700 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. * சிப்ரெமி cipremi விலை 4,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும், * டெஸ்ரெம் desrem விலை 4,800 ரூபாயில் இருந்து 3,400 ரூபாயாகவும், ஜுபிஆர் jubiR விலை 4,700 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், கோவிஃபார் covifor 5,400 ரூபாயிலிருந்து 3,490 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இந்தியாவில் மாதத்துக்கு 39 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. இதை 78 லட்சம் குப்பிகளாக உயர்த்தும் வகையில், தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான ஒப்புதல்களை விரைந்து வழங்கவும் கடந்த வாரம் மத்திய அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
தல புராணம்
தல புராணம் - மதுரை,இந்தியா . 18-ஏப்-2021 22:24 IST

அம்பானிக்கும், இந்த மருந்து கம்பெனிக்கும் தொடர்பில்லை அதனால கறைக்க முடிஞ்சது. பெட்ரோல் விலையைக் குறைக்கச் சொன்னாத் தான் குழப்பம்ன்னு சொல்லுவாங்க. பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்க மாட்டாங்க

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement