dinamalar telegram
Advertisement

உயிரை பணயம் வைத்ததற்கு குவிகிறது பாராட்டு

மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணும் அவரது ஆண் குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டான். ப்ளாட்பாரத்தின் மேல் ஏற சிறுவன் முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. அச்சமயத்தில் ஒரு மின்சார ரயில் அதிவேகத்தில் வந்தது. இதைப் பார்த்ததும் ரயில்வே ஊழியர் மயூர் செல்கே தண்டவாளத்தில் குதித்து வேகமாக ஓடி வந்தார். ரயில் வேகமாக நெருங்கியபோதும் துளியும் பதற்றமின்றி குழந்தையை தூக்கி ப்ளாட்பாரத்தில் போட்டுவிட்டு, தானும் மேலே ஏறினார். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோவை ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தைரியமாக செயல்பட்டு குழந்தை உயிரை காப்பாற்றிய ஊழியர் மயூருக்கு சல்யூட் என ரயில்வே பாராட்டியுள்ளது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை உயிரை காத்த ஊழியரின் துணிச்சலைக் கண்டு பெருமிதம் கொள்வதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement