dinamalar telegram
Advertisement

தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக சில மாநிலங்கள் கூறி வரும் நிலையில் அதனை, மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் வீணடிக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இம்மாதம் 11ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 10.34 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், 44.78 லட்சம் டோஸ்கள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 12.10 சதவீத டோஸ்கள் வீணாகி உள்ளதாம். அடுத்ததாக ஹரியானாவில் 9.74, பஞ்சாபில் 8.12, மணிப்பூரில் 7.8, தெலங்கானாவில் 7.55 சதவீதம் டோஸ்கள் வீணாகியுள்ளன. கேரளா, மேற்கு வங்கம், இமாச்சல், மிசோராம், உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த அளவில் டோஸ்கள் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Pugazh V
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா . 20-ஏப்-2021 23:47 IST

அதிமுக மற்றும் அதன் எஜமான் பாஜக சத்தமே காணுமே. நேரு தான் காரணம் என்றோ டாக்டர் கலைஞர் தான் காரணம் என்றோ எதாவது ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது தானே?

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement