dinamalar telegram
Advertisement

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் மாநில அரசுகளால் தடுப்பூசிகள் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான விலை, மத்திய அரசு செலுத்தும் விலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சில தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலையை மட்டும் உயர்த்திவிட்டனர். இதுபோன்ற மாறுபட்ட விலை நியாயமற்றது. மத்திய அரசை விட குறைந்த நிதி ஆதரங்களை கொண்டுள்ள மாநில அரசுகளுக்கு இந்த விலை உயர்வு, அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக, மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனால், தடுப்பூசி திட்டத்திற்கான ஊசிகளை மத்திய அரசு வழங்கும் என்று மாநிலங்களுக்கு நியாயமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலைகளில், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட அனைத்து குழுக்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். தடுப்பூசி திட்டம் சுமூகமாகவும் விரைவாகவும் நடைபெற, இறக்குமதி உள்ளிட்ட தடுப்பூசி வழங்குவதற்கான மாற்று ஆதாரங்களையும் மத்திய அரசு ஆராய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement