dinamalar telegram
Advertisement

ஆந்திராவில் பரபரப்பு

சென்னை விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேரை மதுரவாயல் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் தடாவைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் மன்னன் ஹரியிடம் இருந்து கஞ்சாவை சப்ளை செய்ததாக மாணவர்கள் கூறினர். இதையடுத்து 2 தினங்களுக்கு முன் மதுரவாயல் போலீஸ் சப் இன்ஸபெக்டர் சுதாகர் தலைமையில் 6 போலீசார் தடாவுக்கு சென்றனர். இன்று காலை சூலூர் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கூட்டாளிகளுடன் ஹரி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை எப்படியோ அறிந்த ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயற்சித்தனர். இதில் எஸ்ஐ சுதாகர் உள்பட 2 தமிழக போலீசார் காயமடைந்தனர். ஆனாலும் மற்ற நான்கு போலீசாரும் துரித கதியில் செயல்பட்டு, ஆந்திர போலீஸ் உதவியுடன் ஹரியின் கூட்டாளிகள் மூவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த 2 போலீசார் சூலூர் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கைதான மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு்ளளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement