dinamalar telegram
Advertisement

பள்ளி, கல்லூரிக்கு ஆசிரியர்கள் வரவேண்டாம்! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே1முதல் பள்ளிக்கு செல்லத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும்; என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம் அனுப்பியுள்ளார். அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டு மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டியிருக்கும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement