dinamalar telegram
Advertisement

காய்கறி கடைகள் 12 மணிக்கு மேல் மூடல்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது. காய்கறி, பலசரக்கு கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து இருந்தன. இன்று முதல் 20ம் தேதி வரை அரசு மற்றும் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம். மருந்தகங்கள், பால் விநியோகம், பத்திரிகை விற்பனை போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி இயங்கின. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. டீ கடைகள் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. அரசு உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த புதிய கட்டுபாடு 20ம் தேதி வரை அமலில் இருக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
CHARUMATHI
CHARUMATHI - KERALA,இந்தியா . 22-மே-2021 22:44 IST

Vivasaye maa leave them. Idhuthan traders habit they were doing all these before big bazaar and other super markets came. But people curse them. They don't understand anythin g

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement