dinamalar telegram
Advertisement

கருணாநிதி படத்தை அகற்ற சொன்ன ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, தலைமை செயலக முகப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் முழு உருவ படம் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனால், ஜெயலலிதாவின் போட்டோ அகற்றப்பட்டு, அந்த இடத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ போட்டோக்கள் வைக்கப்பட்டன. இதை கவனித்த ஸ்டாலின், அதிகாரிகளிடம் விசாரித்தார். தலைமை செயலகம் அரசு சார்ந்த பணிகள் நடைபெறும் இடம். இங்கு கட்சி சார்ந்த படங்களை வைக்க வேண்டாம். படங்களை உடனே அகற்றுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அந்த படங்கள் அகற்றப்பட்டன. கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக இருந்த திமுக, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை தலைமை செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
oce
oce - . 10-மே-2021 07:07 IST

எடுப்பதை வெளியே சொல்லும் போது வைப்பதையும் சொல்ல வேண்டும்.ஒரு எடத்தில் எடுக்கிற மாதிரி எடுத்து விட்டு பத்து இடங்களில் வைக்க கூடாது. மூட ஜனங்களுக்கு இதெல்லாம் தெரியாது.கைக்கு காசு கெடச்சா போதும்.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement