dinamalar telegram
Advertisement

பாலஸ்தீனம் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. சில மாதங்களாக இருதரப்புக்கும் சண்டை தீவிரமடைந்துள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 28 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக, ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினர் இஸ்ரேலின் கடற்கரை நகரமான Ashkelon அஷ்கெலான் மீது ராக்கெட் குண்டுகளை வீசினர். இதில் 30 பேர் இறந்தனர். இவர்களில் 2 பேர் பெண்கள். ஒரு பெண் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சவுமியா, வயது 31 என தெரிய வந்துள்ளது. இடுக்கியில் உள்ள கீரித்தோடு பகுதியைச் சேர்ந்த சவுமியா, அஷ்கெலான் நகரில் மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் வேலை செய்து வந்தார். அவரது வீட்டிலேயே தங்கி 7 ஆண்டாக வேலை பார்த்து வந்தார். கணவர் சந்தோஷ், 9 வயது மகன் இடுக்கியில் வசிக்கின்றனர். ராக்கெட் குண்டு, சவுமியா வீட்டைத் தாக்கியபோது கணவருடன் சவுமியா வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். பயங்கரச் சத்தம் கேட்டதும் செல்போன் கட் ஆனது. அதே நகரில் இன்னும் சில கேரள மாநிலத்தவர் வேலை பார்க்கின்றனர். அவர்களை தொடர்புகொண்டபோதுதான் சவும்யா இறந்தது தெரிய வந்தது. சந்தோஷ் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என அவர் சகோதரர் சாஜி கூறினார். மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், சவும்யா குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறினார். தேவைப்படும் உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement