dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போட மோடி வேண்டுகோள்

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், 8 வது தவணையாக 9.5 கோடி விவசாயிகளுக்கு தலா 2,000 வீதம் 19 ஆயிரம் கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி சேர்ப்பித்தார். ஆன்லைனில் நடந்த இந்நிகழ்வின்போது விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா அச்சுறுத்தல் பற்றி குறிப்பிட்டார். கண்ணுக்கு புலப்படாத எதிரியுடன் இந்தியா போராடிக் கொண்டிருக்கிறது. பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து விட்டனர்; அவர்களது வலி, வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்; கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement