dinamalar telegram
Advertisement

சுணக்கம் கூடாது; மாநிலங்களுக்கு அட்வைஸ்

இந்தியாவில் மேலும் 3,11,170 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய தினத்துடன் ஒப்பிடும்போது, 15 ஆயிரம் குறைவு. மொத்த பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்தை தாண்டியது. மேலும் 3.62 லட்சம் பேர் குணமடைந்தனர். நோயிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 8 லட்சமாக உள்ளது. நாடு முழுக்க இன்னும் 36.18 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 077 பேர் இறந்ததால் மொத்த பலி 2.70 லட்சத்தை கடந்தது. மே 8 ம்தேதி 3.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மே 15ல் பாதிப்பு 3.11 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களாக பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட்டும் குறைந்துள்ளது. மே 8 ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் 19.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, 100 பேரில் 20 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதற்கு முந்தைய வாரம் பாசிடிவிட்டி ரேட் 23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்தபோதிலும், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு காரணமாக, தினமும் சராசரியாக 4,000 பேர் பலியாகின்றனர். நகர்ப்புறங்களைப்போல அல்லாமல் கிராமப்புறங்களில் குறைவாகவே கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அங்கும் அதிக எண்ணிக்கையில் டெஸ்ட் எடுக்கப்படும்போதுதான் இந்தியாவில் பாதிப்பு குறைகிறதா, இல்லையா? என்பது தெளிவாக தெரியும்; எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டக்கூடாது என, மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement