dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் முதல் முறையாக தனது கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். முதலில், திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்திய மக்களுடன் சிறிதுநேரம் உரையாடினார். கொளத்தூர் தொகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் ஓராண்டாக ஸ்டாலின் சிற்றுண்டி வழங்கி வருகிறார். அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் துப்புரவு பணியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். பிறகு, பெரம்பூர் ராஜா கார்டன் குடிசை மாற்று வாரியம் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியை மக்களுக்கு வழங்கினார். இறுதியாக கொளத்தூரில் உள்ள கொளத்தூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தார். 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள், மாஸ்க் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement