dinamalar telegram
Advertisement

அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் தகனம்

மறைந்த எழுந்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் காலமானார். அவருக்கு வயது 98. கி.ரா உடலுக்கு புதுச்சேரி அரசு மரியாதை செய்து சொந்த ஊரான இடைச்செவலுக்கு அனுப்பி வைத்தது. உடலை அவரது மகன்கள் திவாகரன், பிரபாகரன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இடைச்செவல் தோட்டத்து வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. கி.ரா.வின் உடலுக்கு கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இடைச்செவலில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 14 ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement