dinamalar telegram
Advertisement

இரும்பாலையில் மருத்துவ மையம் ஸ்டாலின் திறந்தார்

சேலம் மாவட்டத்தில் தினமும் 600க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. புதிதாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலை உள்ளதால் இறப்புகள் நேர்கிறது. இதை கருத்தில் கொண்டு, சேலம், இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா மருத்துவ மையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்த மருத்துவ மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மருத்துவ மையத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த மருத்துவ மையத்தில் மே 25 முதல் நோயாளிகள் அட்மிட் செய்யப்படவுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement