dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் கோரிக்கை டோட்டல் வேஸ்ட் என்கிறது பாமக!

ஸ்டாலின் கோரிக்கை டோட்டல் வேஸ்ட் என்கிறது பாமக! பாமக அன்புமணியின் அறிக்கை: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் உலகத்தரம் வாய்ந்தது. நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டது அந்த திட்டம். உடனே நிதி ஒதுக்கி கட்டுமானம் முடிந்தது. 2010-ல் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தொடங்கவில்லை. இது தொடர்பாக 2019-ல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். பலன் இல்லை. மாறாக, 15 ஆண்டு குத்தகைக்கு தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. அதற்கான டெண்டர் வேலைகளை கடந்த 21-ம் தேதி முடித்து விட்டது. மத்திய அரசு அந்த நிறுவனத்தை நடத்த போவது இல்லை என்பது தெரிந்து விட்டது. . இப்போதுள்ள ஒரே வழி, அந்த ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்துவதுதான். அப்போதுதான் நமக்கு தேவையானதை முழுமையாக பெறுவதோடு, மீதியை பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். மூன்றாவது அலையிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், 18 வயதான அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி போட வேண்டும். அதற்கு 12 கோடி ஊசி தேவை. செங்கல்பட்டு ஆலையை ஏற்று நடத்தாமல், வேறு எந்த வழியிலும் இவ்வளவு தடுப்பூசி தமிழக அரசால் பெறவே முடியாது. 18 முதல் 44 வயதினருக்கு போட 3.5 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு சர்வதேச டெண்டர் விட்டது. 10 நாளுக்கு மேல் ஆகியும் எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா என எல்லா மாநிலங்களின் டெண்டர்களுக்கும் இதுதான் கதி. செங்கல்பட்டு வளாகத்தில் மத்திய அரசோ தனியாரோ யார் உற்பத்தி தொடங்கினாலும் தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி முழுசாக கிடைக்காது. தமிழக அரசு ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைப்பது வேஸ்ட். இவ்வாறு அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement