dinamalar telegram
Advertisement

கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு 4 பேர் பலி!

வேலூரில் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 69 பேர் சிஎம்சியில் அட்மிட் ஆகியுள்ளனர். ராணிப்பேட்டையில் 4 பேர், திருப்பத்தூரில் 3 பேர் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வேலூரில் இருவரும், திருப்பத்தூரில் ஒருவரும் கறுப்பு பூஞ்சைக்கு நேற்று பலியாயினர். மயிலாடுதுறையை சேர்ந்த மருந்தாளுனர் மீனா கொரோனாவில் இருந்து மீண்டபோதும், இடது கண்ணில் கறுப்பு பூஞ்சை பாதித்தது. சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். கரும்பூஞ்சை பாதித்தவர்களுக்கு போடப்படும் amphotericin B ஆம்போடெரிசின் பி ஊசி மருந்துகள் போதிய அளவில் கிடைப்பதில்லை. இறப்புகளுக்கு இதுதான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேவையான ஊசி மருந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement