dinamalar telegram
Advertisement

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஆய்வு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில்,11 சிங்கங்களில் ஒன்பது சிங்கங்களுக்கு கோவிட் தொற்று இருப்பது ஜூன் 3ல் உறுதி ஆனது . நீலா என்ற பெண் சிங்கம் 3ஆம் தேதி பலியானது . எட்டு சிங்கங்கள் தனி தனித் அறையில் இருக்கின்றன . சிசிடிவி முலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் மருத்துவ பல்கலை, உயிரியல் பூங்கா டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கவிதா ( 23 ) , சசி ( 19) என்ற பெண் சிங்கங்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர் . உயிரியல் பூங்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் மாஸ்க் , கிளவுஸ் , கூலர்ஸ் அணிந்து பேட்டரி வாகனத்தில் பூங்காவில் பயணித்தார் .சிங்கங்களை பார்வையிட்டார் .அவற்றுக்கு எப்படி கோவிட் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் . சிகிச்சை முறை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement