dinamalar telegram
Advertisement

டோக்கன் வாங்க முண்டியடிப்பு மூதாட்டியை அடித்த ஊழியர்

கோவிட் 2வது தவணை நிவாரணம் 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை தொகுப்புக்காக டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க முடியவில்லை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைபேட்டையில் உள்ள ரேஷன் கடைக்கு மக்களை வரவழைத்து டோக்கன் வழங்கினார். கடை ஊழியர். மக்கள் இடைவெளி இல்லாமலும் மாஸ்க் அணியாமலும் முண்டியடித்து டோக்கனை பெற்றனர். இதனால் கோபமடைந்த ஊழியர், மக்களை திட்டிக்கொண்டே டோக்கனை விநியோகித்தார். அப்போது ஒரு மூதாட்டியை கையால் அடித்தார். புதுச்சேரியில் நிவாரணத் தொகை நேராடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதைப்போல தமிழகத்தில் செய்யவில்லை. முண்டியடித்து டோக்கன் வாங்கும் பலர், தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement