dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனைகளில் காலி

இந்தியாவில் கடந்த மே மாதம் 7.4 கோடி டோஸ் தடுப்பூசி தயாரானது. அதில், 25 சதவீதம் அதாவது, 1.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 1.3 கோடி டோசை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வாங்கின. வாங்கியதையும் முழுமையாக தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தவில்லை; 22 லட்சம் டோஸ்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளன. எஞ்சிய 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் சும்மா கிடக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட்க்கு 780 ரூபாய், ஸ்புட்னிக் வி க்கு 1145 ரூபாய் கோவாக்சினுக்கு 1410 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் விரும்பாததுதான் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேங்கக் காரணம் என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா . 13-ஜூன்-2021 07:53 IST

இந்த தடுப்பு ஊசிகளை நமது தமிழக ஒன்றிய அரசு தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சு நடத்தி பேரம் பேசி வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று வாங்கி தமிழக மக்களுக்கு போடலாமே. புதிதாக மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பித்து அது தனது உற்பத்தி தொடர எப்படியும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகி விடும். அதற்கு பதிலாக உடனே ரெடிமேட்டாக கிடைக்கும் தடுப்பு ஊசி வாங்கி போட்டால் மூன்றாவது அலையே இல்லாமல் செய்து விடலாம். மத்திய அரசிடம் கூட பண உதவி கேட்கலாம். ரேஷன் கடைகளில் 4000 ரூபாய் கொடுக்க 8000 கோடி செலவு செய்யும் தமிழக அரசு மக்கள் நலனுக்காக இதை செய்லாமே. செய்யுமா தமிழக அரசு?

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement