dinamalar telegram
Advertisement

மோனோ கிளோனல் மருந்து , தடுப்பூசிக்கு மாற்றாகுமா ?

கடந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட போது மோனோ கிளோனல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கலவை அவருக்கு செலுத்தப்பட்டது . சீக்கிரம் குணமடைந்தார் . இந்த சிகிச்சை பெற அமெரிக்காவில் 20 ஆயிரம் டாலர் வரை செலவாகும் . மோனோ கிளோனல் ஊசி , 2 டோஸ் போட்டால் நுரையீரலில் தொற்று இருந்தால் அழித்து விடும் என கடந்த ஆராய்ச்சிகளில் தெரிகிறது . இந்த மருந்து கொரோனா வைரசை அழித்து முழுமையாக பலன் தருகிறதா என்பதை தெரிந்துக்கொள்ள , ஐதராபாத்தை சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோ என்ராலஜி அமைப்பு சோதனை செய்தது . 40 கோவிட் நோயாளிகளுக்கு மோனோ கிளோனல் மருத்து செலுத்தப்பட்டது . கோவிட் பாதித்த 2 நாளில் இது செலுத்தப்பட்டால் , சீக்கிரம் குணமாகின்றனர் . லேசான அறிகுறிகள் உள்ளவர்களை தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது . உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு செலுத்தினால் உயிருக்கு ஆபத்து . தடுப்பூசி மருந்து செலுத்தபடும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோனோகிளோனல் ஆன்பாடியை செலுத்தினாலும் பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . இதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இந்த சிகிச்சைக்கு 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் . இதே மருந்து எபோலா , எச் ஐ வி சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement