dinamalar telegram
Advertisement

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் குரூப் தேர்வு செய்ய , நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது .அதன் பின் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது . 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், 9 ஆம் வகுப்பில் பெற்ற மார்க் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்கியது . தளர்வு இல்லாத 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் , முதல் கட்டமாக எஸ்எஸ்எல்சி படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அட்மிஷன் துவங்கப்பட்டுள்ளது . பள்ளி மாற விரும்புபவர்களுக்கு அட்மிஷன் நடக்கவுள்ளது . ஒரே பாடப் பிரிவுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் , கூடுதலாக 15 சதவீதம் வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையின் போது கோவிட் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது . அட்மிஷனுக்கு பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
jay
jay - toronto,கனடா . 14-ஜூன்-2021 19:08 IST

இந்த நேரத்தில் தளர்வு கூடாது

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement