dinamalar telegram
Advertisement

35 வயது பெண்ணுக்கு வலை விரித்த முதியவர் கைது

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கவிதா வயது 35. கணவருக்கு கை உடைந்து விட்டதால் 2 மாதமாக வேலைக்கு போகவில்லை. வீட்டின் அருகே காய்கறி, பழங்களை விற்கத் தொடங்கினார். காய்கறி பழங்களை வாங்க கிண்டியை சேர்ந்த முருகன் வயது 65 என்பவரது சரக்கு ஆட்டோவில் கவிதா சென்றார். அப்போது கவிதா மீது முருகனுக்கு ஆசை வந்தது. பல வழிகளில் ஆசையை காட்டினார். முருகனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கவிதா சத்தம் போட்டுள்ளார். கடை போடுவதையே விட்டார் நேற்று கவிதாவை பார்க்க முருகன் சென்றார். வீட்டில் கவிதா இல்லை. கணவருடன் வெளியில் சென்றிருப்பதை அறிந்த முருகன், வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்றார். வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. முருகன் வந்து சென்றதை அறிந்த கவிதா, போலீசில் புகாரளித்தார். முருகனை பிடித்து விசாரித்தபோது, தனது ஆசையை கவிதா நிராகரித்ததால் வீட்டை எரித்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement