dinamalar telegram
Advertisement

தமிழக தேர்தல் செலவு 744 கோடி

தமிழகத்தில் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்றது. திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தலுக்கு 744 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 618 கோடி ரூபாயும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவுகளுக்காக 126 கோடி ரூபாயும் செலவிடப்பட்டதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பரவல் அதிகரித்த நேரத்தில் தேர்தல் நடத்தபட்டதால், கோவிட் விதிமுறைகளை பின்பற்றி ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement