dinamalar telegram
Advertisement

2 டோஸ் தடுப்பூசி போதாது!

கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம், ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வு நடத்தியது. ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டவர்களில், 58 சதவீதம் பேரிடம், டெல்டா வகை வைரசை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லை. இரண்டு டோஸ் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களில் 16 சதவீதம் பேரிடம் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. முழுமையான பாதுகாப்பு பெற வேண்டுமானால், மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்வது சிறந்தது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதே சமயம், வைரஸ் தொற்று பாதித்த பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களுக்கு ஒரு டோஸ் போட்டாலே போதுமானது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையில் கூறியிருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement