dinamalar telegram
Advertisement

ரயில் பாதையில் வெடிகுண்டு பரிசோதனை! 4 ரவுடி கைது

புதுச்சேரி, வாணரப்பேட்டை அருகே காளியம்மன் தோப்பு ரயில் தண்டவாளம் அருகே நேற்றிரவு நேற்று இரவு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, தண்டவாளத்தில் இருந்து புகைமூட்டம் காணப்பட்டது. ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து விசாரித்ததில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவுடிகள் 4 பேர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அது வெடிக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்த்தது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், எதற்காக வெடி குண்டு தயாரித்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement