dinamalar telegram
Advertisement

டெல்டா வேகத்தால் பாதிப்பு குறையவில்லை

உலகளவில் கோவிட் பரவல் இன்னும் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். உலக நாடுகளை 6 மண்டலங்களாக உலக சுகாதார அமைப்பு பிரித்துள்ளது. அதில் 5 மண்டலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்க மண்டலத்தில் கோவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது; 9300 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுவதுதான் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம்; தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடக்காதது; ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தது போன்ற காரணங்களாலும் கோவிட் பாதிப்பு குறையாமல் இருக்கிறது என விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement