dinamalar telegram
Advertisement

நீட் ரத்தாகி விட்டதைப்போல குதிப்பது ஏன்? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி

நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதைப்போல, முதல்வர் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். அதிமுகவை பாதம் தாங்கிகள் என்றும், பாஜவின் அடிமைகள் என்றும் நாகரிகம் இன்றி ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார். 1999 - 2004 காலக்கட்டத்தில் மத்திய பாஜ அரசில் பங்குகொண்டு, 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்தபோது எதை திமுகவினர் தாங்கிக்கொண்டிருந்தார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டினை சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினேன். இதனால் 2020-ம் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் எனவும் அறிக்கையில் பழனிசாமி சுட்டிக் காட்டியுள்ளார். மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு நீட் சம்பந்தமாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement