dinamalar telegram
Advertisement

கடந்த வாரம் கோவிட் பாதிப்பு 10% அதிகரிப்பு பலி 3% உயர்வு

உலகளவில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 9 வாரங்களாக கோவிட் பலி குறைந்து வந்தது. கடந்த வாரத்தில் உலகளவில் 55,000 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது, இறப்பு எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல, தொற்று பாதிப்பும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, இங்கிலாந்து நாடுகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி வேகமாக போடப்படாதது; தளர்வுகள் அறிவிக்கப்பட்டது; டெல்டா வைரஸ் வேகமாக பரவுவது போன்ற காரணங்களால்தான் பாதிப்பும் இறப்பும் அதிகரித்துள்ளது என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனவே, இயல்பு நிலை திரும்பி விட்டதாக அலட்சியம் கொள்ளாமல் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. பாதிப்பும் இறப்பும் அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகள் அடுத்த கட்ட கட்டுப்பாடுகளை அறிவிக்கும் மன நிலையில் உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement