dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் மேலும் 4 நீட் தேர்வு மையங்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன், என்னை சந்தித்து நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நீட் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவரிடம் விளக்கினேன். தமிழக மாணவர்களின் நலன் கருதி விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுப்பிரமணியனிடம் தெரிவித்தேன் என, தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். இந்தாண்டு மலையாளம், பஞ்சாபி மொழிகளையும் சேர்த்து 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement