dinamalar telegram
Advertisement

சிவசங்கருக்கு ஏ கிளாஸ் அறை வழங்க கோர்ட் மறுப்பு

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கருக்கு ஏ கிளாஸ் அறை வழங்கக் கோரி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். ஏ கிளாஸ் வசதி பெறும் கைதிக்கு தனி அறை வழங்கப்படும். கட்டில், பெட்ஷீட், சேர், டேபிள் போன்ற வசதிகள் இருக்கும். படிக்க செய்தித்தாள்கள் கிடைக்கும். 10 ஏ கிளாஸ் கைதிக்கு ஒரு டிவியும் உண்டு. தேவையான மளிகைப்பொருட்களை ஆர்டர் செய்து, விரும்பும் உணவை சமைத்து சாப்பிட முடியும். ஆனால் சிவசங்கரின் மனுவை விசாரித்த கோர்ட் ,அவருக்கு ஏ கிளாஸ் அறை வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement