dinamalar telegram
Advertisement

மத கலவரத்தை தடுக்க விநாயகர் சிலை அகற்றம்

திருச்செங்கோடு நாமக்கல் சாலை கிரிவலப்பாதை பிரிவில் 30 ஆண்டு பழமையான சர்ச் உள்ளது . 3 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக சர்ச்சின் ஒரு பகுதி இடத்தை , அதிகாரிகள் உத்தரவின்பேரில் காலி செய்துள்ளனர். நேற்று காலை அந்த இடத்தில் இந்து அமைப்பினர் திடீரென்று விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் புகார் அளித்ததால் , சிலையை எடுக்குமாறு போலீசார் இந்து அமைப்பினரிடம் கூறினர். இந்து சமய அறநிலையத்துறை இடத்தில்தான் சிலையை வைத்துள்ளோம், கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமாக இந்த பகுதியை ஆக்கிரமித்துவிட்டதாக கூறி சிலையை அகற்ற மறுத்துவிட்டனர். விநாயகர் சிலையை அகற்ற வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் சர்ச் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, இந்து அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க இரவோடு இரவாக அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது. அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement