dinamalar telegram
Advertisement

வீடுகளை இடிக்கும் போது மனசும் உடைந்தது | நேரடி ரிப்போர்ட்

சென்னை நதிகள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்குள்ள குடும்பங்கள் , குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் இடமாறி வருகின்றனர். அரும்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் கூவம் ஓரம் 330க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதில் 93 பேருக்கு மட்டுமே வியாசர்பாடியில் மாற்று குடியிருப்பு கொடுக்கப்பட்டுள்ளது . கடந்த 29 ஆம் தேதி , போலீசோடு வந்த அதிகாரிகள் அனைவரையும் காலி செய்ய கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் , வீடுகளில் தங்க முடியாமல் அப்பகுதிவாசிகள் வேதனையில் உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் , தெரிந்தவர்கள் வீடுகளில் பெண்கள் , குழந்தைகள் தங்கி விட்டு , காலை இங்கு வருகின்றனர் . எந்த வசதியும் இல்லாத இடத்தில் , பள்ளி மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர் . உணவுக்கு கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren - . 04-ஆக்-2021 17:19 IST

0 ............

Reply
KUMAR. S
KUMAR. S - GUJARAT ,இந்தியா . 04-ஆக்-2021 14:08 IST

இது நீதிமன்றத்தின் உத்தரவு..அரசு தலை இட முடியாது...அனால் அவர்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடு செய்துவிட்டு அப்புறம் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இவர்கள் வீடு கட்டும்போது நகராட்சி ஏன் அப்போது அகற்றவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு நபர் (பால்ராஜ்) பேட்டியில் சொல்வது முற்றிலும் சரி.

Reply
LAX
LAX - Trichy,இந்தியா . 06-ஆக்-2021 02:54 IST
Report Abuse

அடேங்கப்பா.. அரசு, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே ஏற்று நடப்பதுபோல சொல்றீங்களே..? நேத்திக்கி கூட (05.08.2021) 'இது உங்கள் இடம்' பகுதியில் வாசகர் ஒருவர் 'ஒரு செங்கலைக் கூட முடியாது' என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தை படிங்க.. தஞ்சாவூரில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றச் சென்ற அதிகாரிகளை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் விரட்டியடித்துள்ளனர்.. இரண்டாவது முறையாக சென்றபோதும் இதே நிலைதானாம்.....

Rate this:
KUMAR. S
KUMAR. S - GUJARAT ,இந்தியா . 04-ஆக்-2021 13:50 IST

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வீடு இடிக்க மாட்டார்கள் ..இவர்களுக்கு உத்தரவு எப்போதோ வந்து இருக்கும். மாற்று இடம் கொடுக்கும்போது அங்கு போகலாமே

Reply
Ganesh
Ganesh - . 04-ஆக்-2021 12:15 IST

சமத்துவபுரம் கட்டி பிராமணர்கள் அங்கே வரவேண்டும் என்று பிரசாரம் செய்வதற்கு பதில் இவர்களுக்கு வீடு வழங்கியிருந்தார் அதுவே சாலச்சிறந்தது. "வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து"

Reply
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 04-ஆக்-2021 10:10 IST

சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து விட்டு ஒப்பாரி வைப்பதில் நியாயம் இல்லை விட்டால் அண்ணா சாலையில் கூடவீடு கட்டி விடுவார்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement