dinamalar telegram
Advertisement

மேடையில் உண்மையை சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள்தான் பஞ்சாயத்து தலைவராக, வார்டு கவுன்சிலராக செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது உண்மைதான் என்பதை அமைச்சர் மூர்த்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். மதுரை அருகே பாறைப்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி பேசும்போது, கரண்ட் கட் ஆனது. டென்ஷனான அமைச்சர், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஊராட்சி தலைவி விஜயலட்சுமியின் கணவர் முத்தையனை கடிந்து கொண்டார். ''ஜெனரேட்டர் வைக்க மாட்டீயா'' என கூறி விட்டு பேச்சை தொடர்ந்தார். சிறிது நேரத்தில் கரண்ட் வந்தது. முத்தையனைப் பத்தி உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியுமே; வீட்டுக்காரம்மா கையெழுத்தை அவனே போட்டுருவான்'' என அமைச்சர் மூர்த்தி பேசியபோது விஜயலட்சுமியும் கணவர் முத்தையனும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement