dinamalar telegram
Advertisement

காபூல் ஏர்போர்ட்டில் அமெரிக்க படை துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதும் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடினார். காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் திரண்டனர். அமெரிக்கர்களை பத்திரமாக மீட்டுச் செல்ல அந்நாடு 6,000 ராணுவ வீரர்களை காபூல் ஏர்போர்ட்டில் குவித்துள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் தங்களது பிரஜைகளை அழைத்து செல்ல போர் விமானங்களை அனுப்பியுள்ளன. பல விமானங்கள் புறப்பட தயாரான நிலையில் காபூல்வாசிகள் பலர் ஏர்போர்ட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து விமானங்களை நோக்கி ஓடினர். அமெரிக்கப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நேரம் செல்லச் செல்ல நிலைமை மோசமானது. அமெரிக்க படையினரை தள்ளி விட்டு நூற்றுக்கணக்கானவர்கள் விமானங்களில் ஏற முற்பட்டனர். இதனால் அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பெண் உட்பட ஐந்து பேர் இறந்தனர். நாட்டை விட்டு தப்பிச் செல்ல தொடர்ந்து மக்கள் குவிந்து வருவதால் ஏர்போர்ட்டில் பதற்றம் நிலவுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement