dinamalar telegram
Advertisement

வாகனங்களை ஓட்டி சென்றனர்

தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியபிறகு காபூல் நகரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. காபூல் உட்பட 4 நகரங்களில் இந்திய தூதரகங்கள் செயல்பட்டன. காந்தகார், ஹெராத், மஸர் இ ஷரிப் நகரங்களில் இருந்த துணை தூதரகங்கள் மூடப்பட்டன. காபூலில் மட்டும் அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை. இந்நிலையில், காந்தகார், ஹெராத்தில் உள்ள இந்திய தூதரகங்களில் தலிபான்கள் நுழைந்து சூறையாடியுள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை எடுத்து சென்றனர். காபூல் தூதரகத்தில் இருந்து அதிகாரிகளை வெளியேற்ற வேண்டாம்; அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று, காபூலை கைப்பற்றிய மறுநாள் இந்தியாவுக்கு தலிபான்கள் தூது அனுப்பினர். ஆனால், நிலைமை மோசமாவதை கருதி இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரும் முன்கூட்டியே அவசர அவசரமாக மீட்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement