dinamalar telegram
Advertisement

டெய்லரிடம் 10 லட்சம் பறித்த இன்ஸ் வசந்தி கைது சிறையில் அடைப்பு

சிவகங்கையை சேர்ந்தவர் அர்ஷத். டெய்லர். பேக் கம்பெனி தொடங்க 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். மேலும் பணம் தேவைப்பட்டதால் நண்பர் பாண்டியராஜை சந்திக்க மதுரையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்கு ஜூலை 5 ம் தேதி வந்தார். அர்ஷத் பணத்துடன் வரும் தகவலை உறவினரான நாகமலை இன்ஸ்பெக்டர் வசந்தியிடம் பாண்டியராஜன் சொன்னார். பணத்தை பறிக்க இருவரும் திட்டம் போட்டனர். நாகமலை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த அர்ஷத்தை இன்ஸ்பெக்டர் வசந்தி சந்தேகத்தின் பேரில் ஜீப்பில் ஏற்றிச்சென்றார். 10 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, மிரட்டி அனுப்பினார். பணத்தை பறிகொடுத்த அர்ஷத் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement