dinamalar telegram
Advertisement

கேரளா குமரி எல்லைகளில் செக்கிங் இல்லை போலீஸ் அலட்சியம் | CheckPost | Corona | Kerala

கோவிட் பரவலை கட்டுப்படுத்த கேரளா அரசு திணறி வருகிறது. ஓணத்துக்கு முன் 22 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது . மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நேரத்தில் , கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தின் 30 எல்லைகளில் போலீசார் செக்கிங் செய்வதாக கூறப்பட்டது . ஆனால் நேரில் பார்த்த போது , 30 இடங்கள் திறந்து விடப்பட்டு இருந்தது. களியக்காவிளை , காக்கவிளை , சூழால் என்ற இடங்களில் மட்டுமே செக்கிங் நடப்பது தெரிந்தது . குறிப்பாக நெட்டா, கோழிவிளை , பிலியூர்சாலை , பளுகல் , காரக்கோணம் , கண்ணூமாமூடு , கண்ண நாக்ரம் உள்ளிட்ட முக்கிய செக்போஸ்டுகளில் சோதனை நடக்கவில்லை . இதனால் கேரள மக்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் , குமரிக்கு ஈசியாக வருகின்றனர்.போலீஸ் அலட்சியத்தால் குமரியில் கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement