dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கான நேரமும் ஒன்றரை மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 7 முதல் மாலை 5.30 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதற்கு பதிலாக, காலை 7 முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement