dinamalar telegram
Advertisement

இன்ஸ் வசந்தி போலீஸ்துறைக்கே களங்கம் ஐகோர்ட் கண்டனம் | Inspector vasanthi

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் அர்ஷத் தொழில் தொடங்க 10 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். பணத்துடன் மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு கடந்த ஜூலை மாதம் வந்தார். அர்ஷத்தின் நண்பர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அர்ஷத்தை மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு விரட்டினார். விவகாரம் விஸ்வரூபம் ஆனதை அடுத்து, வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீலகிரியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. 'வியாபாரியிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தியால் காவல்துறைக்கே களங்கம் என நீதிபதி கூறினார். போலீசாரே குற்ற செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது; யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். வசந்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதி வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Baskaran
Baskaran - திருவண்ணாமலை ,இந்தியா . 09-செப்-2021 22:41 IST

இன்ஸ் போலாம் இன்னும் எத்தனை இன்ஸ் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Reply
 rajan
rajan - . 08-செப்-2021 16:39 IST

ஆள் மயக்கி, வசியக் காரி மாதிரியான தோற்றம். எல்லாம் செய்வாள்.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 08-செப்-2021 06:39 IST

புடிபட்டவ இவள் ஒருத்தி மட்டும்தான்.இன்னும் நிறைய களங்கங்கள் இருக்காங்க எசமான். பாவம் எத்தனை லட்சம் குடுத்து இந்த வேலையை வாங்குனாரோ? இப்பிடி சம்பாரிக்கப்போய் எப்படியோ ஆயிருச்சு

Reply
Anantharaman Srinivasan
Anantharaman Srinivasan - chennai,இந்தியா . 07-செப்-2021 23:37 IST

இன்ஸ் வசந்தி போலீஸ்துறைக்கே களங்கம் ஐகோர்ட் கண்டனம். உண்மை..

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement