dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

அடுத்த மாதம் 9 மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா? என்பது குறித்து முடிவெடுக்க பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தனர். கட்சியின் வளர்ச்சி கருதி தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 15,16 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் மணி கூறினார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement